கறுப்புப் பணம்-அரசு நடவடிக்கை: பிரணாப்
டெல்லி: ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர் அனைவரது விவரங்களும் இந்திய அரசுக்கு தேவை. அதை தர மறுக்கும் ஸ்விஸ் வங்கியிடமிருந்து உரிய முறையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தங்கள் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை வெளியிட முடியாது என ஸ்விஸ் வங்கி இன்று அறிவித்திருந்தது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கருத்து கேட்க முனைந்தனர். அவர் தனது நார்த் பிளாக் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது வழி மறித்த நிருபர்களிடம், "என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்... உரிய முறையில் இந்த விவகாரம் குறித்து ஸ்விஸ் வங்கியுடன் பேசுவோம். ஒரு தேசத்தின் நலனுக்காக இந்த விவரங்களை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்குத் தருவதுதான் சரியானது..." என்றார்.
இந்த விவரங்களைப் பெறுவது அத்தனை சுலபமானதல்ல. ஒரு போன் செய்து கேட்டதும் ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் விவரங்களைத் தந்துவிட மாட்டார்கள். அதில் இரு நாட்டு உறவுகள் மற்றும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறுக்கிடுவதால், இந்திய அரசுக்கு ஒரேயடியாக தகவல் தரமாட்டேன் என ஸ்விஸ் வங்கியும் மறுத்துவிட முடியாது என்கிறார் நிதித்துறை அதிகாரி ஒருவர்.
இன்னொன்று சூழலுக்கேற்ப நெகிழும் தன்மை கொண்ட சட்ட விதிகளின் கீழ்தான் ஸ்விஸ் வங்கி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்திய அரசு உண்மையாகவே நெருக்கடி தரும்பட்சத்தில் அனைத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் விவரமும் தெரிந்துவிடும், என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications