வேட்டி, சேலை ஊழல் - மாஜி அமைச்சர் மதுசூதனன் விடுதலை
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கியதில் ரூ. 12 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து மாஜி அதிமுக அமைச்சர் மதுசூதனன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1991-96ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோருக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
இதில், வேட்டி, சேலை வாங்கியதில் 12 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் மதுசூதனன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நரசிம்மலு உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி கோர்ட், முன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நரசிம்மலு உள்ளிட்ட நான்கு பேருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்தது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மதுசூதனன், நரசிம்மலு உள்ளிட்ட ஆறு பேர் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுக்களை நீதிபதி ஜெயபால் விசாரித்தார்.
இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மீதான புகாருக்கு ஆதாரமில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications