ரூ. 48 லட்சம் வங்கி மோசடி-நெல்லை நபர் கைது
நெல்லை: கோயம்புத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் போலி ஆவணம் கொடுத்து ரூ. 48 லட்சம் நிதி மோசடி செய்த ஒருவரை போலீசார் 2 ஆண்டுகளுக்கு பின் நெல்லை அருகே கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள தக்கலையை சேர்ந்தவர் சுல்தான் மதானி. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு வங்கியில் தொழிற்சாலை தொடங்குவதாக கூறி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.48 லட்சம் கடன் பெற்றார்.
சில மாதங்களுக்கு பி்ன் வங்கி அதிகாரிகளுக்கு அவர் போலி ஆவணம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். ஆனால், 2 ஆண்டுகளாகியும் தலைமறைவான மதானியை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று அவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகத்தியர்பட்டியில் உள்ள உறவினர் வீ்ட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், மதானி தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கோவை சிபிசிஐடி போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications