ஆந்திராவில் விற்கப்பட்ட மதுரை சிறுவர்கள்-ஆட்டோ டிரைவர் கைது
சென்னை: மதுரையைச் சேர்ந்த 3 சிறுவர்களை கடத்தி ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்ற ஆட்டோ டிரைவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை குழந்தைகள் நல்வாழ்வு குழுமத்தின் தலைவர் டாக்டர் மனோரமா, சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்திடம் கொடுத்த புகார் மனுவில்,
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மணிகண்டன் (11), அருணாச்சலம் (12), கண்ணன் (16) ஆகிய 3 சிறுவர்கள் அனாதையாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
அந்த சிறுவர்களை ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளது. ஆந்திராவில் அமங்கல் என்ற இடத்தில் இந்த சிறுவர்கள் கடந்த 6 மாதங்கள் கடும் சித்ரவதை அனுபவித்துள்ளனர்.
இந்த சிறுவர்களை முறுக்கு வியாபாரம் செய்ய பயன்படுத்தி உள்ளனர். தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வைத்தும், உரிய உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். இரும்பு கம்பியை காய்ச்சி, சூடு போட்டும் கொடுமைபடுத்தி உள்ளனர்.
கொடுமை தாங்காமல் இவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். இவர்களை கடத்தி விற்ற கும்பல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட அர்ச்சனா ராமசுந்தரம், இதற்காக தனிப்படையை அமைத்தார்.
இந்தப் படையின் விசாரணையில் சிறுவர்கள் 3 பேரையும் திருமங்கலம் இந்திராநகரைச் சேர்ந்த ரவிக்குமார் (29) என்ற ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்று ஆந்திராவில் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து ரவிக்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரித்ததில் ஆந்திர மாநிலம் அமங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த குமார்-ஜோதி தம்பதி தான் இந்தச் சிறுவர்களை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இந்த தம்பதியையும் கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications