20,000 கிலோ வெளிநாட்டு துவரம் பருப்பு அழிப்பு
தூத்துக்குடி: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு கெட்டு போனதை அடுத்து அவை தூத்துக்குடி அருகே மணலில் புதைத்து அழிக்கப்பட்டது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து உடைக்காத துவரம் பருப்பு 4 சரக்கு பெட்டகங்களில் கப்பல் மூலம் வந்தது.
இந்த சரக்கு பெட்டகங்களை சுங்கத் துறையின் உணவுப் பொருள் சோதனைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்கு பெட்டகத்தில் 20 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு கெட்டுப் போய் விஷத்தன்மை உடையதாக மாறியிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். மற்ற 3 சரக்கு பெட்டகங்களிலும் இருந்த துவரம் பருப்பு நல்ல தரமுள்ளவையாக இருந்தது.
இதைத் தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த சரக்கு பெட்டகம் லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெரிய குழி தோண்டி, அதில் துவரம் பருப்பை கொட்டி மணல் போட்டு மூடி அழித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications