Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகாம்களிலிருந்து 800 பூசாரிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை விடுவிக்கும் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைபட்டுள்ள 800 இந்துப் பூசாரிகள், 6 கத்தோலிக்க பாதிரியார்கள், 2 கன்னியாஸ்திரிகளை விடுவிக்கிறது இலங்கை அரசு.

இதுகுறித்து வவுனியா அரசு அதிகாரி பி.எஸ்.எம்.சார்லஸ் கூறுகையில், முதலில் 400 பேர் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் தங்களது உறவினர்களிடம் செல்கின்றனர். சிலர் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள் என்றார்.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள் வேலிகளுக்கு மத்தியில் அடைத்து வைத்துள்ள இலங்கை அரசு மிக மிக சிறிய எண்ணிக்கையில் தமிழர்களை வெளியேற்றி வருகிறது. இருப்பினும் வெளியே வரும் தமிழர்கள் பெரும்பாலும் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மாறாக, உறவினர்கள் வீடுகளுக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

உடலில் தோட்டாவுடன் வந்த அகதி

இந் நிலையில் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டு ஒன்று விலாவில் பாய்ந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஈழத்தமிழர் ஒருவர் ராமேஸ்வரத்துக்கு கள்ளத் தோனியில் தப்பி வந்துள்ளார்.

இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டம் சுதந்திரபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் ஜெயகுமார். இவருக்கு சுகந்தினி என்ற மனைவியும், மதி இன்பம், கனி இன்பன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் போர் சமயத்தில் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்து ஒரு தோட்டா பதுங்கு குழியில் மறைந்திருந்த இவரது வலது விலாவில் பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். தற்போது அவரிடம் ராமேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அப்போது அவர் ராமேஸ்வரம் போலீசாரிடம் கூறுகையில்,

போர் சமயத்தில் சுதந்திரபுரம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றோம். ராணுவம் நடத்திய தாக்குதலில் பதுங்கு குழியில் தங்கியிருந்த எனது வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து முல்லைத் தீவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் துப்பாக்கி குண்டுகளை அகற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

என்னால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன். இதையடுத்து வவுனியா முகாமுக்கு சென்று அகதிகளோடு தங்கினோம். பின்பு ஒரு படகோட்டிக்கு ரூ 2 லட்சம் கொடுத்து இங்கு தப்பி வந்தோம் என்றார்.

அவரிடம் போலீசார் சோதனை செய்த போது இலங்கை, கனடா, அமெரிக்க, ஐரோப்பா உள்பட பல வெளிநாட்டு பணமும், இந்திய பணம் ரூ.25 ஆயிரமும் இருந்தது.

பின்னர் ரஞ்சித் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+