இலங்கைக்கு போலி விமான டிக்கெட்-2 பேர் கைது
திருச்சி: போலி விமான டிக்கெட் மூலம் இலங்கை செல்ல முயன்ற இரண்டு ஜவுளி வியாபாரிகளை திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த விஜயன் (46) மற்றும் காரைக்குடி புதுசந்தை கீழ தெருவில வசிக்கும் ஜெயபால் (36) ஆகிய இருவரும் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக அடிக்கடி இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை, திருச்சி விமான நிலையத்திலிருந்து மிகின் லங்கா விமானம் மூலம், கொழும்பிற்கு செல்ல அவர்கள் தயாராகி கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரின் ஆவணங்களை குடியேற்ற அதிகாரி (பொறுப்பு) ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, கொழும்பு செல்வதற்கான டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சரியாக இருந்தது. ஆனால், திரும்பி வருவதற்கான டிக்கெட் போலியானது என்பது ஆய்வில் தெரிந்தது.
இதனையடுத்து விஜயன், ஜெயபாலை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிராவல்ஸ் ஏஜென்சி அதிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications