கோவை, திருப்பூர் பந்த்-வாபஸ் பெற்ற இந்து முன்னணி
திருப்பூர்: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கல்வீச்சு நடத்தப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த பந்த் விலக்கி கொள்ளப்பட்டது.
திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீநகரில் கடந்த 25ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் சராமரியாக கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
பின்னர் விநாயகர் சிலையை கரைத்து விட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் மீது காங்கேயம் ரோடு, சிடிசி டிப்போ சந்திப்பில் 10 பேர் அடங்கிய கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவங்களை கண்டித்து, தாகுதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பந்த் போராட்டத்தை கைவிடுமாறு, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் மற்றும் திருப்பூர் எம்.பி. சிவசாமி ஆகியோரிடம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. சாந்தி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பந்த் போராட்டம் கைவிடப்படுவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications