இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது நிரூபணம்-பாஜக
சென்னை: இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதை மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது ராணுவத்திற்கு சக்தி வாய்ந்த பீஷ்மா டாங்கிகளை' தயாரித்தளித்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறது சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை. இது பாராட்டுக்குரிய செயல்.
பீஷ்மா டாங்கிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை தந்தது உண்மை. ஆனால் அவை இலங்கையின் தற்காப்புக்காக தரப்பட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த அல்ல என்று பேசியிருக்கிறார்.
இலங்கைக்கு எந்த எதிரி நாடும் இல்லை. அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குமானால் அவை பாரதத்திற்கு எதிராக பயன்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு இந்தியாவால் தரப்படும் ஆயுதங்கள் எந்த நாட்டிற்கு எதிராக பயன்படப் போகிறது?
விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டு இலங்கையால் ஏவப்படும் இந்த ஆயுதங்கள் அங்குள்ள அப்பாவித் தமிழர்களை நோக்கித்தான் பாய்கிறது. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் அமைச்சர் பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது.
தங்களை தற்காத்துக் கொள்ள ஒன்று, எதிரிகளை தாக்க ஒன்று என இரண்டு ஆயுதங்களை ராணுவ வீரர்கள் எடுத்துச் செல்வதில்லை.
தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது என்ற உண்மை தற்போது அம்பலமாகியிருக்கிறது என்று கூறியுள்ளார் கணேசன்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications