தமிழகத்தின் ஐடி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு

தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமியின் பயிற்சி முகாம் மதுரையில் இன்று தொடங்கியது. இதை சென்னையிலிருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிற போதும், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி மூலம் தொழில் கல்வி ஆசிரியர்கள் 5000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கேற்ற தகுதிகளை மாணவர்களிடத்தில் புகுத்துவார்கள்.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 6 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.
தனி தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான். 1997ல் இது அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றார் முதல்வர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications