12 மணி நேரத்தில் அடுத்தடுத்து இந்தோனேசியா-சீனா-நியூசி.யில் நிலநடுக்கம்
ஜகர்த்தா: இன்று காலை வரை கடைசி 12 மணி நேரத்தில் வரிசையாக மூன்று நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் 6.9, சீனாவில் 6.2 மற்றும் நியூசிலாந்தில் 5.2 ரிக்டராகவும் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இன்று காலை சுமார் 6.21 மணிக்கு இந்தோனேசியாவின் சுலவசி மாகாணத்தில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக இருந்தது. இது சுலவசி பகுதியில் உள்ளபாவ் பாவ் தீவுக்கு 234 கிமீ தென் கிழக்கே மையம் கொண்டிருந்தது.
இது குறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகையில்,
இந்த பூகம்பகம் 670 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எதுவும் இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகவில்லை. ஆனால், இங்கிருந்து பல ஆயிரம் கிமீ தூரத்தில் இருக்கும் கிழக்கு திமோர்மக்களும் இந்த பூகம்பத்தை உணர்ந்தனர். அங்கிருந்த மக்கள் பீதியில் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் நின்று கொண்டனர் என்கிறது.
சீனாவில் 6.2 ரிக்டர்...
இந்த பூகம்ப அதிர்வுகள் அடங்கவதற்குள் இன்று காலை 7.22 மணிக்கு மற்றொரு பூகம்பம் வட மேற்கு சீனாவை தாக்கியது. அது 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இது கின்காய் மாகாணத்தின் கோல்முட் நகருக்கு 165 கிமீ தென் கிழக்கே, சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நியூசிலாந்தில் மிதமான பூகம்பம்...
முன்னதாக நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனுக்கு அருகே நேற்று இரவு சுமார் 7.40 மணிக்கு 5.2 ரிக்டர் அளவு பூகம்பம் பதிவாகியுள்ளது. இது வெல்லிங்டன் நகருக்கு தெற்கே 20 கிமீ தூரத்தில், 30 கிமீ ஆழத்தில் மையமிட்டதாக தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications