சிட் பண்ட்கள் டெபாஸிட்டுகளை ஏற்கத் தடை: ரிசர்வ் வங்கி
மும்பை: சிட் பண்ட் என்படும் தனியார் சீட்டுக் கம்பெனிகள் பொது மக்களிடமிருந்து டெபாசிட்களை பெறுவதற்கு தடை விதிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து சிட் பண்ட் நிறுவனங்கள் டெபாசிட்களை பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியை பல நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி வந்தன. பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு பல நிதி நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன.
இனி அப்படி நடக்காத வகையில் மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணத்தை இழந்த பொதுமக்கள் தரப்பிலிருந்து நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தன.
இதையடுத்து சிட் பண்ட் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பெற தடை விதிப்பதாகவும், இனி பங்குதாரர்களிடம் இருந்து மட்டுமே அந்த நிறுவனங்கள் டெபாசிட் பெறலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்கள் பெறப்பட்டிருந்தால் அது முதிர்வடையும் போது மக்களிடமே கொடுக்க வேண்டும், புதுப்பிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications