50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 'குரங்கு' கிருஷ்ணா கைது
தஞ்சாவூர்: 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குரங்கு கிருஷ்ணா எனப்படும் கிருஷ்ணா தஞ்சையில், கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டை இன்று பெங்களூர் மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடியாக முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தனது கூட்டாளிகளான லோகி என்கிற லோகேஷ், ருத்ரா, டோனி என்கிற தனியா ஆகியோருடன் பதுங்கியிருந்த குரங்கு கிருஷ்ணா சிக்கினார்.
இவர்களிடமிருந்து ஒரு கார், பணம், தங்க நகைகள், செல்போன்கள், பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதவிர ஏராளமான தொலைபேசி எண்கள் அடங்கிய ஒரு டைரியும் சிக்கியுள்ளது. அதில் பிரபல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன.
குரங்கு கிருஷ்ணா மீது பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில், கொலை முயற்சி, கொலை, கடத்தல், வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல் என 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குரங்கு கிருஷ்ணா, தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வர்த்தகர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை தொழிலாக கொண்டவன்.
இதுதவிர விபச்சாரப் பெண்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தான்.
பெங்களூரில் உள்ள ஹெப்பால், எலஹங்கா, வித்யநாராயணபுரா, ஜாலஹள்ளி, அல்சூர் கேட், வயாலிகாவல், மகாலட்சுமி லேஅவுட், சதாசிவ நகர், ஹெப்பால், ஹனுமந்த் நகர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
வயாலிகாவல் காவல் நிலையத்தில் குரங்கு கிருஷ்ணா குறித்த முழு வரலாறும் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் இன்னொரு ரவுடிக் கும்பலின் தலைவனை கடத்திக் கொலை செய்ய கிருஷ்ணா கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த வேலையைச் செய்ய தனது கூட்டாளி 'தூத்' ரவியை ஏவியிருந்தான் குரங்கு கிருஷ்ணா.
இருப்பினும் இந்தத் திட்டம் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ஹனுமந்த் நகரில் உள்ள கெம்பே கெளடா மைதானத்திற்கு அருகே உள்ள ஒரு இடத்தை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் கிருஷ்ணாவின் திட்டம் தடுக்கப்பட்டது.
அங்கு 9 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணா, தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெய்டு நடத்தி நால்வரையும் கைது செய்தோம் என்றார்.
கைது செய்யப்பட்ட குரங்கு கிருஷ்ணாவும், அவரது கூட்டாளிகளும் பெங்களூர் கொண்டு செல்லப்படவுள்ளனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications