ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலக பொருட்கள் ஜப்தி
ஸ்ரீவில்லிபுத்தூர்: நில ஆர்ஜித வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலக பொருட்கள் நீதி மன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ளது வலையப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (75). இவரது மகன் பால்சாமி (50). இவர்களுக்கு பாட்டக்குளத்தில் 4.58.5 எக்டேர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்காக இவருடைய நிலம், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1998 செப்டம்பர் 25 ம் தேதி கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு ஏக்கருக்கு 21 ஆயிரத்து 800 ரூபாய் வீதம் 4 லட்சத்து 37ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை வாங்க மறுத்த இவர்கள், கூடுதல் தொகை கேட்டு 1999ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சப் - கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தாரணி, 2003 நவம்பர் 24 ம் தேதி அன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் ரூ 34 லட்சத்து 21 ஆயிரத்து 914 வழங்க உத்தரவிட்டார். ஆனால் இத் தொகை வழங்கப்படாததால் கடந்த 2004 ல் பேச்சியம்மாளும், பால்சாமியும் சப் - கோர்ட்டில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நீதி மன்ற கோர்ட் ஊழியர்கள் உதவியுடன் நில உரிமையாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகளை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications