605 உள்ளாட்சி காலியிடங்களுக்கு அக்டோபரில் தேர்தல்
நெல்லை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 605 உள்ளாட்சி இடங்களுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல நடத்துவது தொடர்பாக கலெக்டர் ஜெயராமன் மற்றும் போலீஸ் அதிகாரிகளூடன் நெல்லையில் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 605 இடங்களுக்கு அக்டோபரில் தேர்தல் நடத்தப்படும். இதில் 508 ஊரக உள்ளாட்சிகளும், 97 நகர் புற உள்ளாட்சிகளும் அடங்கும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தேர்தல்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாக்கு சீட்டு முறை தொடரும்.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களிலும் வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூர் பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய தொழில் நுட்பத்தில் வாக்கு பதிவு இயந்திரம் தயாரித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்த ரூ.200 கோடி செலவாகும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications