திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை
திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் மகன் நூர்முகம்மது (32). இவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளராக உள்ளார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனாஸ் (28) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு கூத்தாநல்லூரில் அவரது வீட்டிலிருந்து நூர்முகம்மது கடைவீதிக்கு சென்றார். அப்போது, எதிரில் வந்த அனாஸ்க்கும் இவருக்கும் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அனாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர் முகம்மதுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீசார் தப்பியோடிய அனாஸை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications