சென்னையில் மூப்பனார் நினைவு தின போஸ்டர்-வாசன் மீது புகார்

சென்னை மாநகராட்சி சமீபத்தில் பிறப்பித்த ஆணைப்படி அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலையில் எந்த விளம்பர பேனர்களோ, போஸ்டர்களோ வைக்க கூடாது.
இந்நிலையில் மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனாரின் நினைவு தின விழா நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள், பேனர்களை காங்கிரஸார் வைத்திருந்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட அண்ணா சாலை, காமராஜர் சாலை பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், மூப்பனாரின் மகனுமான ஜிகே வாசன் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விளம்பரங்கள், பேனர்கள் வைத்துள்ளனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications