சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு தேர்வு கட்டாயமில்லை - ஆலோசனைக் குழு ஒப்புதல்
டெல்லி: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பத்தாவது வகுப்புத் தேர்வு கட்டாயம் இல்லை என்ற முடிவுக்கு மத்திய கல்வி ஆலோசனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்வு செய்ய தனி அமைப்பை உருவாக்கவும் இந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பத்தாவது வகுப்புத் தேர்வை கட்டாயப்படுத்தாமல், விரும்பினால் எழுதலாம் என்ற திட்டத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.
அதன்படி, அதே பள்ளியில் பிளஸ் ஒன் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் பத்தாவது வகுப்புத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை. வேறு பள்ளிக்குப் போக விரும்புவோர் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என்பதே கபில் சிபலின் திட்டம்.
இந்தத் திட்டம் மாநில கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் பரிசீலனைக்கு விடப்பட்டது. இந்த வாரியம் இதுகுறித்து ஆலோசித்து கபில் சிபலின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சிபல் கூறுகையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாவது வகுப்புத் தேர்வு கட்டாயமில்லை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில் மாநில அரசுகளும் இதை அமல்படுத்தலாம் என்றார்.
இதேபோல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய தனி அமைப்பை உருவாக்கவும் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சிபல் கூறுகையில், இது ஒரு சுயேச்சையான அமைப்பாக செயல்படும். இதில் பல்துறை நிபுணர்கள், பிரபல கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இந்த அமைப்பு, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைக்கும் என்றார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications