இலங்கைத் தமிழ் பத்திரிக்கையாளருக்கு 20 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

Tissainayagam
கொழும்பு: இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளரும், சண்டே டைம்ஸ் இதழில் கட்டுரைகள் எழுதி வருபவருமான ஜெயப்பிரகாஷ் திசைநாயகத்திற்கு, தீவிரவாதத்திற்குத் துணை போனதாக கூறி இலங்கை கோர்ட் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

கொழும்பில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தீபாளி விஜேசுந்தரா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்.

திசைநாயகம் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசர கால முறைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வடக்கு கிழக்கு ஹெரால்ட் என்ற மாதாந்தர இதழ் மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர் - சிங்களர் இடையே துவேஷம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிட்டதாகவும், விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்பட்டதாகவும் திசைநாயகம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி திசைநாயகம் கைது செய்யப்பட்டார். 6 மாதங்கள் அவர் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அவர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை என்ற கடுமையான தீர்ப்பை அளித்துள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம்.

திசைநாயகத்திற்கு விதிக்கப்பட்ட இந்த கடுமையான தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், திசைநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நேற்று ஏராளமான பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஒபாமாவால் பாராட்டப்பட்டவர் ....

கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் திசைநாயகம், முன்பு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர் ஆவார்.

திசைநாயகம் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த மே மாதம் நடந்த உலக பத்திரிக்கை சுதந்திரம் குறித்த மாநாட்டில் பேசிய ஒபாமா, தவறாக நடத்தப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு சரியான உதாரணமாக திகழ்கிறார். தங்களது பணியைச் செய்ததற்காக சிறையில் அடைத்துத் தண்டிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு சரியான உதாரணமாக திகழ்கிறார் திசைநாயகம் என்று கூறியிருந்தார்.

திசைநாயகத்திற்கு எதிரான இந்த கடுமையான தீர்ப்பு இலங்கையில் பத்திரிக்கைச் சுதந்திரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை சித்தரிப்பதாக கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+