தலித் ஊழியர்களை தாக்கியதாக பாமக எம்.எல்.ஏ மீது வழக்கு
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சுங்கச் சாவடியில் பணியாற்றும் தலித் ஊழியர்களை செருப்பைக் கொண்டு தாக்கியதாக பாமக எம்.எல்.ஏ தமிழரசு மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டக் கவுண்டம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் எம்விஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டப்பட்டது.
இந்த சாவடி நிறுவப்பட்டது முதல் அதிமுக, பாமக போன்ற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒப்பந்தத்தை மீறி நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியேயும் வாகனங்களிடம் சுங்கம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பாலமுருகன், செந்தில் ஆகியோரை எம்எல்ஏ தமிழரசு செருப்பால் அடித்ததாகக் கூறி, ஊழியர்களுக்கு ஆதரவாக கோட்டக் கவுண்டம்பட்டி மக்கள் சுங்கச்சாவடி அருகே திடீர் சாலை மறியல் நடத்தினர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மக்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகார் அளித்தனர். அதன் பேரில் ஓமலூர் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், செருப்பால் அடித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த பிரச்னை குறித்து ஓமலூர் டிஎஸ்பி சந்தன பாண்டியன் எம்எல்ஏ தமிழரசுவிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், சுங்கச்சாவடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications