சிங்கூர் நிலத்தைத் தரத் தயார், ஆனால்... டாடா நிபந்தனை

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். ஆனால் இந்த நிலத்தில் 400 ஏக்கர் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அந்த விவசாயிகளுக்கே திருப்பித் தரவேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தொடர் போராட்டம் நடத்தினார்.
பெரும் கலவரம் ஏற்பட்டு, தொழிற்சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது டாடா நிறுவனம்.
இப்போது நானோ கார்களை குஜராத்தில் உள்ள தங்கள் வேறு தொழிற்சாலைகளில் வைத்து தயாரித்து அனுப்புகிறது டாடா. மேலும் அங்கேயே நானோ தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டாடா டீ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தா வந்த ரத்தன் டாடா, மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் நிருபம் சென்னைச் சந்தித்து சிங்கூர் விவகாரம் குறித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், சிங்கூரில் தங்களிடம் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை திருப்பித் தரத் தயார் என்றும், ஆனால் அதற்குரிய நஷ்ட ஈட்டை டாடா நிறுவனத்துக்கு மாநில அரசு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாநில நலனுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வேன் என்று கூறிய டாடா, இப்போதைக்கு புதிய முதலீடுகள் எதையும் மேற்கு வங்கத்தில் செய்யும் திட்டமில்லை என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications