நலவாரிய முறைகேடு-தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருச்சி: முறை சாரா தொழிலாளர் நல வாரிய முறைகேடுகளைக் கண்டித்து, திருச்சியில் சிஐடியு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பல்வேறு முறைகேடுகள் நீடிக்கின்றன.
தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்படாத நிலையும், அலைக்கழிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு சிஐடியு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து திருச்சி காஜாநகர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். முற்றுகை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் கே. பாலபாரதி எம்எல்ஏ துவக்கி வைத்து பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நல வாரிய அலுவலகங்களிலும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றது.
திருச்சி மாவட்டத்தில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கேட்பு மனு நலவாரிய அட்டைகள் கண்டறிந்து வழங்க வேண்டும். புதிய பதிவுக்கான மனுக்களில் விஏஓவிடம் கையெழுத்து வாங்கச் சொல்லி மாதக்கணக்கில் அதிகாரிகள் இழுத்தடிப்பதை கண்டிக்கின்றோம் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications