இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று சுமார் 7.4 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதையடு்த்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் இன்று காலை சுமார் 11.55 மணிக்கு சுமார் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது தாசிகாமாலாயா நகரில் இருந்து சுமார் 142 கிமீ தொலைவில் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
சுமார் 10 வினாடிகள் நீடித்த அந்த பூகம்பத்தில் அந்நகரில் உள்ள டச்சு வங்கி கட்டிடம் பயங்கரமாக குலுங்கியது. இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள், அலுவலகர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அந்நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. மக்கள் அனைவரும் பீதியி்ல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோம் என்றார்.
அருகில் இருக்கும் பாடங் நகரங்கில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் சுமார் 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பெரிய அளவில் இருக்காது என்றும், சில 100 கிமீ பகுதிக்குள் சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications