இரட்டை கொலை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரிக்க வேண்டும்-ஜெ
சென்னை: பனையூர் இரட்டை கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் சென்னை பனையூரில் முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவன் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டனர். அவரது மகன், மருமகள் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சண்முகராஜன் விசராணையின் போது மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
பனையூர் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த வழக்கில் நிலவும் பல புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும்.
தமிழக அரசு சென்னை போலீசிடம் இருந்து இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியுள்ளது. இதனால் விசாரணையில் மேலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
குற்றவாளி சண்முகராஜன் மர்மமான முறையில் இறந்தது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications