மும்பை விமானத்தில் தீ-215 பயணிகள் தப்பினர்
மும்பை: மும்பையில் இருந்து ரியாத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ ஏற்பட்டது. இது உடனடியாக கவனிக்கப்பட்டதை அடுத்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 215 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு சவுதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு கோனர்க் என்று பெயரிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பியது.
215 பயணிகளுடன் ரன்வேயில் ஓடத் துவங்கிய போது விமானத்தின் ஒரு என்ஜினில் தீ பிடித்து புகை வருவதை விமான நிலைய அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து விமானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் வேகம், வேகமாக விமானத்தில் இறக்கப்பட்டனர். பின்னர் அந்த என்ஜினில் இருந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டு 215 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா கூறுகையில்,
தீ உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தடுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று ரியாத் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications