ஜஸ்வந்த் புத்தகத்துக்கு மோடி விதித்த தடை நீக்கம்
அகமதாபாத்: ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்திற்கு குஜராத் அரசு விதித்த தடையை நீக்கி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தகத்தை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
ஜின்னா குறித்து சமீபத்தில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது புத்தகத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை தரக்குறைவாக எழுதியிருப்பதாகவும், அது தேச ஒற்றுமையை குலைத்து விடும் என்று கூறி அந்த புத்தக விற்பனைக்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி தடை விதித்தார்.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் வழக்கு தொடர்ந்தார். அதை நீதிபதி கேஎஸ் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூவர் பெஞ்ச் விசாரித்தது.
விசாரணையின் இறுதியில் தடையை ரத்து செய்து இன்று அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
புத்தக விற்பனை மீது விதிக்கப்பட்டுள்ள தடை அடிப்படை உரிமைகளை தடுக்கும் வகையில் இருக்கிறது. இந்த புத்தகம் எந்த வகையில் தேச நலனையும், ஒற்றுமையையும் பாதிக்கும் என்பதை அரசு விதித்த தடை நோட்டீஸ் விளக்கவில்லை.
தடை உத்தரவு வழங்கும் முன் அரசு சரியாக ஆலோசிக்கவில்லை என நீதிமன்றம் கருதுகிறது. புத்தக விற்பனை மீதான தடையை நீக்க உத்தரவிடுகிறது.
அதே நேரத்தில் மாநில அரசு புதிய நோட்டீஸ் அனுப்ப விரும்பினால் அதை செய்யலாம் என்று கூறினர்.
தீர்ப்பு குறித்து ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் திரில்லாக இருக்கிறது. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. புத்தக விற்பனைக்காக இனி யாரும் நீதிமன்றம் போக வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது. நான் யாரை பற்றியும் தவறாக கூறவில்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications