அசாம் உள்ளிட்ட 4 வட கிழக்கு மாநிலங்களில் பூகம்பம்-5.9 ரிக்டர்
கௌகாத்தி: அசாம் உள்ளிட்ட நான்கு வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை சுமார் 5.9 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய 7 மாநிலங்களும் பூகம்பம் அதிகம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன.
உலக அளவில் அதிக பூகம்பம் ஏற்படும் இடங்களில் இந்த மாநிலங்களுக்கு 6வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 1.21 மணிக்கு அசாம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் வீடுகள் குலுங்கின.
சுமார் 10 வினாடிகள் நீடித்த இந்த பூகம்பத்தால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பாதி தூக்கத்தில் எழுந்து அலறியடித்து தெருவுக்கு ஓடினர்.
இந்த பூகம்பம் மேலாயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பூகம்ப ஆய்வு நிலையத்தில் 5.9 ஆக பதிவாகியிருந்தது. இது மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூர் மற்றும் நாகலாந்துக்கு இடையே மையம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. இது கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் ஏற்படும் நான்காவது பூகம்பம். முன்னதாக கடந்த 31ம் தேதி 5.3, 19ம் தேதி 4.9, 11ம் தேதி 5.6 அளவு பூகம்பங்கள் ஏற்பட்டிருந்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications