சிறார் சீர்திருத்த பள்ளியில் ஓரினச் சேர்க்கை - விசாரணைக்கு உத்தரவு
தஞ்சை: சிறுவர் சிறையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி, ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனாக இருந்தவர் முனுசாமி. இங்கு உள்ள 6 சிறுவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி சிறை வார்டன் முனுசாமியை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில், அவர் இறந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது மகன் கார்த்திகேயன் உயர் நீதி மன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், சிறுவர் சிறையில் உள்ள சிறுவர்களுடன் ஊழியர்கள் ஓரினச்சேர்க்கை தொடர்பு வைத்துள்ளனர் என்று கொலை செய்யப்படுவதற்கு முன்பு எனது தந்தை என்னிடம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் காமராஜ், சிட்டிபாபு, ரத்தினம், கணபதி ஆகியோர்தான் சிறுவர்களை தூண்டிவிட்டு, என் தந்தையை கொலை செய்துள்ளனர். எனவே, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில்,
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. சிறுவர் சீர்த்திருத்த சட்டப்படி, சிறுவர் சீர்திருப் பள்ளிகளில் அடைக்கப்படுவோருக்கு போதுமான பாதுகாப்பு, கல்வி, மறுவாழ்வு வழங்க வேண்டும்.
மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க அரசு பிரதிநிதி, சமூக ஆர்வலர், குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை சமூகநலத்துறை செயலாளர் அமைக்க வேண்டும்.
அந்த குழு 6 மாதத்தில் விசாரித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications