விபத்துக்குள்ளான ரெட்டி ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேர் பலியாக காரணமான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது. அதில் விமானியின் குரல் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஆய்வு செய்து பார்த்தால், விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்புப் பெட்டி அல்லது விமானியின் குரல் பதிவுக் கருவியை, நல்லமலைக் காட்டிலிருந்து மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எதிர்ப்புப் பிரிவைச் சேர்ந்த அதிரடிப் போலீஸார் இந்தக் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தனர். பின்னர் இது தற்போது விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து கர்னூல் மாவட்டம் ஆதம்கூர் ஆர்.டி.ஓ. லட்சுமிகாந்த் கூறுகையில், விசாரணைக்கு கருப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள தகவல்கள் உதவும் என நம்புகிறோம். இந்த கருப்புப் பெட்டி தற்போது டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியில் விமானியின் குரல் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. அதில் உள்ள செய்தி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர் என்றார்.

இதற்கிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆதம்கூர் போலீஸ் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பெயரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெட்டியுடன் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு..

இதற்கிடையே ராஜசேகர ரெட்டியுடன் விபத்தில் பலியான முதன்மைச் செயலாளர் சுப்ரமணியம், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, குரூப் கேப்டன் எஸ்.கே.பாட்டியா ஆகியோரின் இறுதிச் சடங்குகளும் நேற்றே நடைபெற்றன.

இன்னொருவரான கேப்டன் எம்.எஸ்.ரெட்டியின் இறுதிச் சடங்கு இன்று நல் கொண்டா மாவட்டம் பிருந்தாவன்புரத்தில் நடைபெறவுள்ளது.

நால்வரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று கர்னூலிலிருந்து கொண்டு வரப்பட்டன.

சுப்ரமணியத்தின் உடல் நெல்லூர் மாவட்டம் செமகுண்டா கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

வெஸ்லியின் உடல் பிரகாசம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மம்டிபாலம் என்ற இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் பாட்டியாவின் இறுதிச் சடங்கு ஆல்வால் என்ற இடத்தில் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+