காட்டெருமை மீது மோதி தடம்புரண்ட தார் எக்ஸ்பிரஸ்
ஜெய்ப்பூர்: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஓடும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் காட்டெருமை மீது மோதி, தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அருகில் முனாபாவ் என்ற நகரில் இருந்து பாகிஸ்தானின் சிந்து மாநிலம் கராச்சிக்கு பக்கத்தில் இருக்கும் காக்ரோபார் இடையே தார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
பழமைவாய்ந்த இந்த ரயில் போக்குவரத்து 1965 இந்திய, பாகிஸ்தான் போரின் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சுமார் 41 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டில் துவக்கப்பட்டது.
இந்த ரயில் நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலம் சாலாவாஸ் ரயில் நிலையத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூன்று காட்டெருமைகள் மீது மோதியது.
இதையடுத்து தடுமாறிய ரயில் தடம்புரண்டது. இதில் ரயில் என்ஜினும், முதல் பெட்டியின் முன் சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ரயில்வே நிர்வாகம் கிரேன் மூலம் தடம்புரண்ட என்ஜினை சரி செய்தது. இதை தொடர்ந்து ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக 4.50 மணிக்கு மீண்டும் கிளம்பியது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications