ராஜபக்சேவுடன் நாளை சம்பந்தன் குழு சந்திப்பு
கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 7 பேர் குழு நாளை ராஜபக்சேவை சந்திக்கவுள்ளனர்.
சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில், இலங்கை தமிழரசு கட்சியின் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவின் என்.ஸ்ரீகாந்தா, எம்.பிக்கள் தங்கேஸ்வரி கதிர்காமர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
ராஜபக்சேவுடன் பேச வேண்டிய விஷயம் குறித்து இந்தக் குழு கூடி ஆலோசித்துள்ளது. அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ராஜபக்சேவுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களோடு ராஜபக்சே சந்திக்கவிருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சே சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்
இதற்கிடையே, கொழும்பு பல்கலைக்கழகம், ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
நாட்டின் இறையாணமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, அனைத்துலக சமூகத்தின் மத்தியில் இலங்கையின் பெருமையை உயர்த்தியமைக்காக இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications