ஆலங்குளம் அருகே பச்சிளம் குழந்தை கொலை
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கல்வெட்டான் குழியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. தவறான தொடர்பால் பிறந்த குழந்தையை கொன்று வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகேயுள்ளது காசிநாதகிராமம். இதன் மேல்புறம் உள்ள கல்குவாரியின் குழியில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
நேற்று காலை 6 மணி அளவில் இந்த கல்வெட்டான் குழியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் ரத்த காயங்களுடன் மிதப்பதை கிராம மக்கள் பார்த்தனர். உடனே புதுப்பட்டி விஏஓ அருணாசலத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தாசில்தார் காமாட்சி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தவறான தொடர்பில் பெற்றெடுத்த குழந்தையை யாராவது வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications