இலங்கை பிரதமர் கைரேகையை பதிவு செய்த ஜப்பான்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கேவை ஜப்பான் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, காக்க வைத்து கைரேகை எடுத்த பின்னரே வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை பிரதமர் விக்ரமநாயகே ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நரிட்டா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவரை ஜப்பானிய அதிகாரிகள் சாதாரண பயணியைப் போல நடத்தியுள்ளனர்.

அவரை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்று கைரேகையைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுள்ளார் விக்ரமநாயகே. அதன் பின்னர்தான் அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டாராம்.

எதற்காக விக்ரமநாயகேவை இப்படி காக்க வைத்து கைரேகை எடுத்து விசாரித்தார்கள் என்பதை ஜப்பான் இதுவரை விளக்கவில்லை.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்கலாமா, ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+