சுரங்கத்தில் வெடி விபத்து:சீனாவில் 35 பேர் பலி-44 மாயம்
பீஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 35 பேர் பலியானார்கள். மேலும், 44 பேர் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர்.
சீனாவில் ஆயிரக்கணக்கான சிறு நிலக்கரி சுரங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாலும், சிலவற்றில் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் சீனா இதை தடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நிலக்கரி சுரங்கங்களை மூடியுள்ளது.
கடந்த மாதம் ஷான்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட இது போன்ற விபத்தில் 74 பேர் பலியானார்கள். இதையடுத்து சீன தொழிலாளர்கள் நலத் துறையின் தலைமை நிர்வாகி லூ லின், மேலும், ஆயிரம் சிறிய சுரங்கங்களை மூட முடிவு செய்தார்.
இந்நிலையில் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங்சான் நகர் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்று இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வெடிவிபத்தில் சிக்கியது.
அப்போது சுரங்கத்தில் 93 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் 14 பேர் விபத்து பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்ற அனைவரும் விபத்தில் மாட்டி கொண்டனர்.
இதையடுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 35 பேரி்ன் உடல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 44 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இதுவரை சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications