ஸ்டாலின் தொகுதியில் அவலம் - பள்ளியை இரவில் பார் ஆக்கும் 'குடிமக்கள்'!
சென்னை: சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள பள்ளிக்கூடத்தை இரவு நேரங்களில் குடிகாரர்கள் திறந்தவெளி பார் ஆக மாற்றி கொட்டமடித்து வருவதாக மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர்.
இது மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகும். பகல் நேரத்தில்தான் இது பள்ளிக் கூடமாக காட்சி அளிக்கம். ஆனால் இரவாகி விட்டால் இங்குள்ள மைதானத்தை திறந்தவெளி பார் ஆக மாற்றி விடுகிறார்கள் குடிகாரர்கள்.
இது இன்று நேற்றல்ல, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறதாம். ஆனால் இந்த பார் விளையாட்டைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.
பள்ளிக்கூடத்திற்கு அருகே காலியாக உள்ள பெரும்பாலான இடத்தை பல்வேறு நபர்களும் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு அருகே உள்ள ஏரிக்கரையில் ஏராளமான குடிசைவாசிகள் வசிக்கின்றனர். பள்ளிக் கூடத்திற்கு அருகிலேயே இந்த குடிசைப் பகுதி உள்ளது.
பள்ளிக் கூடத்திற்கென்று தனியாக சுற்றுச் சுவர் கிடையாது. எனவே பள்ளிக் கூடமும், குடிசைப் பகுதியும் ஒரே வளாகம் போல காணப்படுகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் குடிசைவாசிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை தங்களது இருப்பிடமாக மாற்றி விடுகிறார்கள்.
இந்த நிலைமை காரணமாக இங்கு படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. தற்போது வெறும் 115 பேர் மட்டும்தான் இங்கு படிக்கிறார்களாம்.
இப்பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் கூறுகையில், இரவு நேரங்களில் எங்கெங்கிருந்தோ ஆண்கள் இங்கு வந்து விடுகிறார்கள். விடிய விடிய குடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் கேள்வி கேட்க முடிவதில்லை. அவர்களில் பலர் சமூக விரோதிகளாக உள்ளனர் என்றார்.
குடிசைவாசிகளுக்கு இரவு நேரம் முழுக்க பள்ளிக் கூடம் அவர்களது வசிப்பிடமாக மாறி விடுகிறது. பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து தூங்குகிறார்கள், குளிக்கிறார்கள், துணி காயப்போடுகிறார்கள்.
இந்த நிலைமை குறித்து பலமுறை அதிகாரிகளுக்குப் புகார் போயும் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை என்று புலம்புகிறார்கள் மாணவர்கள்.
இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் நேரடியாக தலையிட்டு இந்த அவல நிலையை நீக்கி பள்ளிக் கூடத்தின் புனிதத்தை மீட்டு, மாணவர்களுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications