சிலை பணிகள்-இரவு 7 மணிக்குள் நிறுத்த மாயாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: லக்னோவில் கட்டப்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் பூங்கா உள்ளிட்ட 6 நினைவிடங்களின் கட்டுமானப் பணிகளை இன்று இரவு 7 மணிக்குள் நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாட்ச்மேன் தவிர வேறு யாரும் அந்த கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இன்று இரவு 7 மணிக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நீதிபதிகள் பி.என்.அகர்வால், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்தது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டும் ஒரு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கூறுகையில், செப்டம்பர் 8ம் தேதி மாநில அரசு, எந்தவித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. உ.பி. அரசின் சார்பில் நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் அந்த உத்தரவாதத்தை, மூத்த அதிகாரியான நீங்களே மீறியிருப்பது வருத்தத்துக்குரியது என்றனர்.
கடந்த 8ம் தேதி உச்சநீதிமன்றம், மாயாவதி அரசு ரூ. 2,600 கோடி செலவில், கன்ஷிராம் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு நினைவிடங்கள் கட்டுவதைக் கடுமையாக கண்டித்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications