அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையில் தூக்கி வீசப்பட்ட திமுக பிரமுகர்
சிவகாசி: சிவகாசி அருகே சல்வார்பட்டியில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் மேடையில் இருந்த திமுக பிரமுகர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றியம், சல்வார்பட்டியில் பொது மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலர் கனிராஜ், இறவார்பட்டி தி.மு.க கிளை செயலர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய செயலர் கனிராஜுக்கும், கிளை செயலர் கருப்பையாவுக்கும் இடையே நீண்ட நாளாக மன கசப்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், விழா மேடையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கருப்பையா மாலை, சால்வை அணிவிக்க வந்தார். அவரை ஒன்றிய செயலாளர் கனிராஜ் -ம், அவரது கோஷ்டியினரும் தடுத்தனர்.
கட்சிக்காரர்கள் சால்வை, மாலை அணிவிப்பதை தடுக்க வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதால் அவருக்கு, கருப்பையா மாலை, சால்வை அணிவித்தார்.
அப்போது கனிராஜ் கோஷ்டியினர், கருப்பையாவை மேடையில் இருந்து கீழே தள்ளி தூக்கி விசினர். இதில், இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் இலவச கலர் டிவி வாங்க வந்த பயனாளிகள் அலறி அடித்து ஓடினர். போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications