இதுவரை 281 விமானங்கள் ரத்து... 5 வது நாளாக தொடரும் விமானிகள் ஸ்ட்ரைக்!
சென்னை: ஜெட் ஏர்வேஸ் விமானிகள் - நிர்வாகம் நடத்திய முதல் சுற்றுப் பேச்சுகள் நேற்று தோவல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றும் 5வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதுவரை 281 விமானங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. டிக்கெட் புக்கிங்குகள் மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டன.
பணிநீக்கம் செய்யப்பட்ட 4 ஜெட் ஏர்வேஸ் விமானிகளை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. விமானிகளுடன் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. இதனால் 5 வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
இதனால் சென்னையில் இருந்து பெங்களூர், மும்பை, டெல்லி செல்லும் 6 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிப்பட்டார்கள்.
'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்துக்கு மொத்தம் 380 விமானங்கள் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவையில் இவை ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 25 வெளிநாட்டு விமானங்கள் உள்பட 281 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுவிட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications