பாகிஸ்தான் திடீர் ராக்கெட் வீச்சு! எல்லையில் பதட்டம்!
அமிர்தசரஸ்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை வாகாவில் பாகிஸ்தான் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள் அடாரி - வாகா எல்லையில் அடுத்தடுத்து மூன்று ராக்கெட்டுகள் ஏவியது பாகிஸ்தான். இத்தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் வீசிய ராக்கெட் குண்டுகளின் பாகங்களை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எல்லைப்புற கிராம மக்களும் இந்தத் தாக்குதல் குறித்துப் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் மிஷின் கன் மூலம் பல மணி நேரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதி்யை நோக்கி சுட்டனர். இதனால் எல்லையில் பெறும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பாகிஸ்தான் இதேபோன்ற தாக்குதலை நடத்தியது நினைவிருக்கலாம்.
மறுக்கும் பாகிஸ்தான்...
ஆனால் இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என வழக்கம் போல மறுப்புத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.
ஆனால் இந்தத் தாக்குதலுக்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும், மீண்டும் பாகிஸ்தான் இப்படி நடந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
எல்லைப்புற மக்கள் பீதியடையாமல் இருக்குமாறு ராணுவ அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications