அரசியலில் காம்ப்ளி 'தொபுக்கடீர்'!-மகா. சட்டசபை தேர்தலில் போட்டி!!

கிரிக்கெட் அல்லது சினிமா மூலம் கொஞ்சம் புகழ் கிடைத்தால் போதும் நம்மவர்கள் அதை பயன்படுத்தி கொண்ட அரசியலில் புகுந்துவிடுவார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வேறு வழியில்லாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காம்ப்ளி லோக்பாரதி என்ற கட்சியில் இணைந்துள்ளார்.
விரைவில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காம்ப்ளி இணைந்துள்ள லோக்பாரதி கட்சி மூன்றாவது அணியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த மூன்றாவது அணியின் பொது கூட்டத்தின் போது அவர் விக்ரோலி தொகுதியிலிருந்து போ்டடியிடுவார் என லோக்பாரதி கட்சி அறிவித்தது.
இது 2வது இன்னிங்ஸ்...
அந்த விழா மேடையில் சுமார் 50 ஆயிரம் தொண்டர்களுக்கு மத்தியில் தனது அரசியல் வாழ்க்கையை துவக்கி முதன் முறையாக காம்ப்ளி பேசுகையில்,
இது எனது இரண்டாவது இன்னிங்ஸ். இந்த மைதானத்தில் இரவும், பகலுமாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு, இந்திய அணியில் இடம்பிடித்தேன். இன்று அதே இடத்தில் எனது அரசியல் வாழ்க்கையை துவக்குகிறேன். அரசியலிலும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசுவேன் என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற காந்தி குல்லாவுடன் வந்திருந்த சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் சஞ்சய் தத் பேசுகையில்,
எனக்கு அரசியல் மேடைகளில் பேசி பழக்கம் இல்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை மாற்ற வேண்டும். வரும் தேர்தலில் மூன்றாவது அணி சிறப்பாக வெற்றி பெறும் என்றார்.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏபி பரதன், மார்க்சிஸ்ட் தலைவர் சிதாராம் யெச்சூரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications