குஜராத் இடைத் தேர்தல்-பாஜக அமோக வெற்றி

தண்டா, ஜஸ்தான், சமி, தெகாம், சோடிலா, தோராஜி, கோடினார் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இதில் கோடினார் பாஜக வசம் இருந்தது. மற்ற 6 தொகுதிகளிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தது.
இந் நிலையில் இன்று நடந்த இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தண்டா, ஜஸ்தான், சமி, தெகாம், சோடிலா ஆகிய 5 இடங்களில் பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
தோராஜி, கோடினார் ஆகிய தொகுதிகளி்ல் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த 6 தொகுதிகளில் ஐந்தை பாஜக கைப்பற்றியுள்ளது.
பாஜக வசமிருந்த ஒரு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஈடுபடவே இல்லை. இருப்பினும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சிக்கு டெபாசிட் காலி:
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் தெக்காலி சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. சிரஞ்சீவி கட்சியின் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
7173 வாக்குகள் வித்தியாசத்தி்ல் தெலுங்கு தேசம் வேட்பாளரை, காங்கிரஸ் வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.
கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி 35,000 ஓட்டுக்களை அள்ளியிருந்தது. ஆனால் இந்த இடைத் தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 15,000க்கும் சற்று அதிகமான வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் அக்கட்சி டெபாசிட் தொகையை இழந்தது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications