இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்: கேபியிடம் பாக். விசாரணை நடத்துமாம்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்தாலும் உலகம் மௌனமான வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.
இப்போது அவரிடம் இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பு வரப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளதாம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி கூறியிருந்தார்.
எனவே, இதனை தெளிவுபடுத்த கேபியிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த, அங்குள்ள தீவிரவாதிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருகின்றன இலங்கையும் பாகிஸ்தானும்.
வன்னிப் போரில் புலிகள் தோற்கடிக்கப்படும்வரை இந்தக் குற்றச்சாட்டை இந்திய உளவுத் துறைமீது சுமத்தி வந்தது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications