அமைச்சர் நெப்போலியன் முன்பு திமுக நிர்வாகிக்கு அடி உதை!
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன் முன்னிலையில் மருதூர் திமுக நகர செயலாளருக்கு அடி உதை விழுந்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன் நேற்று நன்றி கூற வருகை தருவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் நெப்போலியன் நேற்று காலை முதல் குளித்தலை தொகுதிக்கு உடப்பட்ட கிராமப் பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுன் சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், பணிக்கப்பட்டி அருகே அமைச்சர் நெப்போலின் கார் நேற்று மாலை 6 மணி அளவில் வந்த போது அங்கு திமுக கொடியை ஏற்றி வைக்குமாறு மருதூர் நகர செயலாளரும், மருதூர் டவுன் பஞ்சாயத்து தலைவருமான கண்ணன் வற்புறுத்தியுள்ளார்.
அப்போது, அமைச்சர் நெப்போலியன் தரப்பினருக்கும் கண்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணனை திமுக நிர்வாகிகள் சிலரே அடித்து உதைத்தனர்.
இதனையடுத்து காயமடைந்த கண்ணன் குளித்தலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து கண்ணன் கூறுகையில், எங்கள் பகுதியில் கொடியேற்றி வைக்குமாறு அமைச்சர் நெப்போலியனிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தேன்.
அதற்கு ஒப்புதல் தெரிவித்து அமைச்சர் காலை வருவதாக கூறினார். ஆனால் வரவில்லை. மாலை தான் வந்தார். அப்போது கொடியேற்றச் சொன்னேன். அப்போது, அமைச்சர் தூண்டுதலின் பேரில் திமுக நிர்வகாகிளே என்னை அடித்து உதைத்தனர். இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications