களக்காடு-ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
நெல்லை: நெல்லை அருகே காளக்காடு பகுதியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் பீதி காரணமாக தூங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
களக்காடு புலிகள் காப்பாகத்துக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணை நுழைவு வாயில் பகுதியில் சிவபுரம், கள்ளியாறு, சிவல்விளை உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றன.
இந்த கிராமங்களில கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சிவபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. பின்னர் அவை களக்காடு புதுதெருவை சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான 2 பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது.
பின்னர் அதிகாலை 4 மணி அளவில் வீடுகளுக்கு அருகில் வந்து பிளிறி சென்றன. இந்த சம்பவங்களால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்க முடியாமல், அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி குட்டியானை பலி...
இந்நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பாகம் அருகே மாஞ்சோலை கோயில் திட்டை என்ற பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வெங்கடேஷ், பத்ரசாமி, மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு 5 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. உணவு தேடி வந்தபோது மின்சார கம்பத்தில் துதிக்கை பட்டு இறந்ததாக தெரிகிறது.
இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் அழுகிய நிலையில் காணப்பட்டது. யானையின துதிக்கை கருகி காணப்பட்டது. அம்பை கால்நடை மருத்துவர் கணேஷ் யானையின் உடலை பரிசோதித்தார். பின்னர் அதே இடத்திலேயே யானையின் உடல் எரிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications