இந்திய படைகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு

இரு வாரங்களுக்கு முன் சி்க்கிம் எல்லையில் கெராங் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்திய-சீன எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் (ITBP) மீது சீன ராணுவத்தினர் சுட்டனர். ஆனால், இந்தத் தகவலை மத்திய அரசு வழக்கம்போல் மூடி மறைக்க முயன்றது. ஆனாலும் தகவல் வெளியில் கசிந்துவிட்டது.
1996ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய-சீன ஒப்பந்தத்தையடுத்து இரு தரப்பும் இதுவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதி்ல்லை. முதல் முறையாக இப்போது இந்த ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது.
கடந்த ஆண்டு சிக்கிமின் கெராங் பகுதிக்குள் சீன ராணுவ வாகனங்கள் 1 கி.மீ. தூரம் வரை ஊடுருவியது குறிப்படத்தக்கது.
இப்போது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதையடுத்து கொல்கத்தா விரைந்த ராணுவத் தளபதி தீபக் கபூர், கிழக்கு மண்டல ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
1962ம் ஆண்டு இந்தியா- சீனா போர் நடந்தபோது காஷ்மீர் பகுதியில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அருணாசல பிரதேசத்தை தனது பகுதி என்று கூறி வரும் சீனா காஷ்மீரின் லடாக் பகுதிக்கும் உரிமை கொண்டாடி வருகிறது. இந் நிலையில் தான் சிக்கிமில் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் நடக்கவில்லை-வெளியுறவுத்துறை:
ஆனால், அப்படி ஒரு துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்று வழக்கம் போல் வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications