ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டி-யுஎஸ் செல்கிறது
ஹைதராபாத்: விபத்தில் சிக்கிய ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதையடுத்து ஹெலிகாப்டரில் கடைசி சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது விரைவில் தெரியவரும்.
கடந்த 2ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நல்லமலா காட்டு பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ராஜசேகர ரெட்டி உட்பட பயணம் செய்த ஐந்து பேரும் பலியானார்கள்.
இதையடுத்து கமாண்டோ படையினர் உடைந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரித்தனர். அப்போது கறுப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், விபத்தில் கறுப்பு பெட்டி பலத்த சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கறுப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்பி சரிசெய்ய முயற்சித்து வருகிறது.
இது குறித்து சிபிஐ டிஐஜி லட்சுமி நாராயணா கூறுகையில்,
கறுப்பு பெட்டிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் பதிவாகியிருக்கும் விமானிகளின் பேச்சுக்களை கேட்க முடியவில்லை. இதையடுத்து இந்த பெட்டியை அமெரிக்காவுக்கு ஒரிரு நாட்களில் அனுப்ப இருக்கிறோம்.
கறுப்பு பெட்டியில் பதிவாயிருக்கும் செய்திகள் இன்னும் 10 நாட்களில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications