ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுகவினர் அடிதடி
பண்ருட்டி: பன்ருட்டி அருகே துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை செய்வதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், நெல்லிகுப்பம் எம்எல்ஏ சபா ராஜேந்தரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த மனக்கசப்பு தான் துணை முதல்வர் வரும் 20ம் தேதி பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுர திறப்பு விழாவுக்கான ஏற்பாட்டின் போது மோதலாக மாறியுள்ளதாக தெரிகிறது.
இந்த விழாவுக்காக திமுகவினர் சார்பில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்கு பக்கத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஸ்டாலினை வரவேற்று யார் டிஜிட்டல் போர்டுகள் வைப்பது என்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் நெல்லிகுப்பம் எம்எல்ஏ ஆதரவாளரான காடாம்புலியூர் ஊராட்சித் தலைவர் பார்வதி மகன் அறிவழகன் பிரிவினர் மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவாளரான மேலிருப்பு ஊராட்சித் தலைவர் சூடாமணி மகன் தளபதியுடன் வந்தவர்கள் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில், படுகாயமடைந்த திமுகவினர் தளபதி( 35), எலந்தம்பட்டு ஜெயபால்(45), அறிவழகன் (40), செல்லபெருமாள் (39) ஆகிய நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து காடாம்புலியூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications