பணம்-பதவி ஆசையில் தலைவர்கள்-நரேஷ் குப்தா

நெல்லை கலெக்டர் ஜெயராமன் மற்றும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திருச்செந்தூர் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் காலி பணியிடங்களை கணக்கிட்ட பிறகு தான் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
தொடர்ந்து எலக்ட்ரானிக் வாக்கு பதிவிற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். என்றார்.
முன்னதாக அமெரிக்கத் தூதரகம் மற்றும் சேவியர் கல்லூரி ஆகியவை இணைந்து ஜனநாயகத்தில் யார் சிறந்த தலைவர், என்ற தலைப்பில் பேச்சு போட்டியை பாளையங்கோட்டையில் நடத்தின.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்லூரிகளில் இருந்து 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில் பேசிய குப்தா, தலைவர்கள் பணம், பதவி, ஈகோவிலிருந்து விடுபட்டால் மட்டுமே நாடு முன்னேறும்.
அனைத்து மட்டங்களிலிருந்தும் தலைவர்கள் வருகிறார்கள். இவர்களில் லிங்கன், மண்டலே, காந்தியடிகள், ஆகியோர் மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தனர். ஆனால் தற்போதைய தலைவர்கள் பணம், பதவி ஈகோவில் உள்ளனர். எனவே அதிலிருந்து தலைவர்கள் மீண்டால் நாடு முன்னேறும் என்றார்.
நிகழ்ச்சியில் நெல்லை பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன், சேவியர் கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம், அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் லாரன் கொலிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தூதரக சர்வதேச பரிமாற்ற இயக்குனர் நிக்கோலஸ் நம்பா, பல்கலைக்கழக பேராசிரியர் மணிக்குமார் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். இதற்கு மாணவர்கள் பதிலளித்தனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications