ஜெ. ஆர்ப்பாட்டத்துக்காக அறிக்கை விடுகிறார்'
சென்னை: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா எப்படியாவது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அறிக்கை விடுகிறார் என் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கை,
தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து பல கோட்டங்களுக்கு பேருந்துகளை பிரித்து கொடுக்க முடிவெடுத்து இருப்பதாகவும், அண்ணா நூற்றாண்டு நிறைவு நாளான 15ம் தேதி பல பேருந்துகளை பிரித்துக் கொடுத்துள்ளனர் என்றும் கோடநாட்டில் மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
அதற்காக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் இன்று வரை எந்த கோட்டத்திற்கும் எந்த பேருந்தையும் பிரித்துக்கொடுக்கப்படவில்லை. அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆனால் விரைவு பேருந்து கழகத்தில் தற்போது ஓடி கொண்டிருக்கும் பேருந்துகளால் கூடுதலாக இழப்பு ஏற்படுகிறது.
விரைவுப் பேருந்து கழகத்தின் சார்பில் வெளி மாநிலங்களுக்கு அல்லாது தமிழகத்திற்குள் ஓடுகின்ற பஸ்களை மற்ற போக்குவரத்து கழகங்களின் வசம் ஒப்படைப்பதன் மூலம் இந்த இழப்பை குறைத்திட முடியும் என்று ஒரு கருத்து பேச்சளவில் இருந்தது.
இதை வைத்துக்கொண்டு நாங்கள் அவ்வாறு முடிவெடுத்ததாக கருதிக்கொண்டு, எதையாவது அறிக்கை விட வேண்டும், எதற்காகவாவது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அறிக்கை விட்டு வருகிறார் என அதில் நேரு கூறியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்கு-தேமுதிக...
இந நிலைில் தேமுதிக தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில்,
தேமுதிக தொழிற்சங்க பேரவையின் மாநில பிரிவு நிர்வாகிகளை விரிவாக்கம் செய்யவும், மாவட்டங்களில் பிரிவு அமைப்புகளை ஏற்படுத்தவும் பேரவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி, அவர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு பொது துறை தொழிலாளர்கள், பஞ்சாலை, தோட்ட தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
போக்குவரத்து கட்டணங்கள் 50 காசு திடீரென உயர்த்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகங்களின் பஸ்களையும், தொழிலாளர்களையும் வேறு போக்குவரத்து கழகங்களுக்கு மாற்று முடிவை கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications