இலவச வேட்டி சேலை தயாரிப்பு மும்முரம்!
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக ரூ. 256 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் மும்முராக நடப்பதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியை, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திருவள்ளூர் பகுதிகளில் 221 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேட்டி, சேலை தயார் செய்யப்படுகின்றன.
விசைத்தறியில் சேலைகள், வேட்டிகள் தயாரிக்கும் பணியை, கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, சேலம், மதுரை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
இதற்காக தமிழக அரசு ரூ. 256 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படும். அவை டிசம்பர் 15 ம் தேதிக்குள் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ஜனவரி 1ம் தேதி இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார்.
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி சேலைக்கு காப்புரிமை...
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி, சேலம் வேட்டி, ஆரணி சில்க்ஸ், பவானி ஜமுக்காளம், சின்னாளப்பட்டி சேலை போன்றவற்றிக்கு உற்பத்தி இட அடையாள காப்புரிமை கேட்டு பதிவு செய்துள்ளோம் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications